மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே பல சர்ச்சைக்கு பேர் போன மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள சமுகவியல் துறையில் பேராசிரியராக வேலை செய்து வருப்வார் கருப்பையா(59) இவர் மீது இதே துறையில் படிக்கும் மாணவிகள் சிலர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி கடந்த ஏப்.11 ம் தேதி பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் அளித்தனர். இது குறித்து கடந்த 12 ம் தேதி பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணயில் முடிவு எட்டப்படாததால் அந்த மாணவி காவல்துறை மதுரை சரக டி ஐ ஜி அலுவலக்த்தில் புகார் அளித்ததை தொடர்ந்து டி ஐ ஜி பொன்னி உத்தரவின் பேரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து பேராசிரியர் கருப்பையா மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை மூன்று பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் வருகின்ற ஜீன் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் பாலியல் புகாரில் கைதான சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதற்கு முன் நிர்மலா தேவி வழக்கம் கடந்த சில நாட்களுக்கு முன் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டுவதாக ஒரு பேராசிரியரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொந்தரவு பேராசிரியர் கைது
