• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்: பெயர் சூட்டினார் முதல்வர்..!

ByA.Tamilselvan

Dec 19, 2022

தமிழக பள்ளிக் கல்வித்துறை வளாகத்துக்கு (டி.பி.ஐ.) பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார். சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து தொடக்கக் கல்வி அலுவலகமும் அமைந்துள்ள வளாகத்திற்கு டி.பி.ஐ. என்று பெயர் இருந்து வந்தது.
திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று பெயர் சூட்டப்படும் என சட்டசபையில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவும் அங்கு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அரசின் சார்பில் இப்போது அன்பழகனின் நூற்றாண்டு நினைவு விழா கொண்டாடப்படுகிறது. இந்த தருணத்தில் டி.பி.ஐ. முகப்பில் அவரது பெயரில் நூற்றாண்டு வளைவு கட்டி முடிக்கப்பட்டது. அந்த வளைவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் திறந்து வைத்தார். மேலும், பள்ளிக் கல்வி வளாகத்துக்கு (டி.பி.ஐ.) பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று பெயர் சூட்டினார்.