மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.,
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று எழுமலை பெரியகுளம் கண்மாயில் கரைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.,

இதே போல் இந்த ஆண்டும் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்ட மக்கள் இன்று விநாயகர் சிலைகளை மேள தாளத்துடன் எழுமலையின் முக்கிய வீதிகளின் வழியாக எடுத்து வந்து ஆரவாரத்துடன் எழுமலை பெரிய குளம் கண்மாயில் கரைத்தனர்.,
இந்த விழாவிற்காக உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் 300 க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.,








