மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு பள்ளியில் நடைபெற்ற சக்கிமங்கலம் குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் நடுவர்களை கௌரவிக்கும் விழா ஆகியவை மதிப்புமிகு மதுரை கிழக்கு வட்டாரக் கல்வி அலுவலர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார்.

ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். சக்கிமங்கலம் குறுவள மையத்திற்குட் பட்ட 12 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கலைத்திருவிழாவில் பங்கு பெற்றன. இதில் முதல், இரண்டு, மூன்றாம் இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. நடுவர்களாக பணியாற்றிய ஆனந்தி, பாண்டியராஜன், ஸ்டீபன், பிரதீபா, வேல் விழி, ராதா, மணிமாலா ஆகிய ஆசிரியர்கள் கௌரவிக்கப் பட்டனர். ஆசிரியை அருவகம் தொகுத்து வழங்கினார். ஆசிரியர் பயிற்றுநர் சிவ பார்வதி நன்றி கூறினார்.








