• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சிவகார்த்திகேயன் மகளுடன் பிரியங்கா மோகன் .. வைரல் புகைப்படம்

ByA.Tamilselvan

Nov 1, 2022

டிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலமாக வலம் வருபவர். இவர் நடிப்பில் அண்மையில் பிரின்ஸ் என்ற திரைப்படம் வெளியாகி பட்டய கிளப்பியது.ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது பிரின்ஸ் திரைப்படம்.கடந்த அக்டோபர் 21ம் தேதி வெளியான இப்படம் 10 நாள் முடிவில் ரூ. 45 கோடி வரை வசூல் சாதனை செய்தது, இப்போதும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது, அயலான் கடந்த 2018 ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிக்கப்பட்டது. பின்னணி பணிகள் நடைபெற்று வருவதால், ரிலீஸாக தாமதமாகி உள்ளது. பிரின்ஸ் படத்தின் விளம்பர பணியின் போது பேசிய சிவகார்த்திகேயன், அயலான் படம் குறித்து பேசினார்.
அவர் கூறுகையில், “அயலான் படத்தில் கம்பியூட்டர் கிராபிக்ஸ் அதிகளவில் இருப்பதால் அதனை முடிக்க தாமதமாகி வருகிறது. தற்போது அந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறை அல்லது ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம் என்றார்.இப்போதே படத்தின் ரிலீஸ் குறித்து மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
தமிழ் சினிமாவின் இளம் நடிகை பிரியங்கா மோகன். சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர், டான் திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர். தற்போது இவர் நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவுடன் எடுத்துக் கொண்ட கியூட்டான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.