கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் எதிர் வரும் (நவம்பர்-13)ம் தேதி வாக்கு பதிவு நடக்க இருக்கிறது.
வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியின் வேட்பு மனு மீதான பரிசீலனை இன்று நடைபெற்ற நிலையில், பிரியங்கா காந்தியின் வேட்பு மனு பரிசீலனைக்கு பின் இன்று (அக்டோபர்_28)ம் நாள் ஏற்கப்பட்டது.
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 7 சட்டமன்ற தொகுதிகளில். ராகுல் காந்தி உடன் பிரியங்கா காந்தி சூரா வெளி சுற்று பயணத்தில், வாக்காளர்களை அவர்களின் வீடு தேடி சென்று வாக்கு சேகரித்த நிலையில், இன்று(அக்டோபர்_28)ம் நாள் வயநாட்டில் உள்ள கலைக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி என இரண்டு கல்லூரிகளுக்கு, அண்ணனும், தங்கையும் சென்று கல்லூரி மாணவிகளிடம் வாக்கு சேகரிக்கிறனர்.

தினம் குறைந்தது இரண்டு மணிநேரம் ரோடுஷோ-விலும் ராகுல்காந்தி பிரியங்கா காந்தி பங்கேற்று சென்ற இடங்களில் எல்லாம் சாலையின் இருபுறமும் மக்கள் திரளாக வரிசையில் நின்று பிரியங்கா காந்தியை நோக்கி கை அசைத்து எங்கள் வாக்கு கை சின்னத்திற்கு தான் என்று உற்சாக மிகுதியில் சொல்வதை காண முடிந்தது.
வயநாடு பகுதியில் அண்மையில் ஏற்பட்ட மண் சரிவு இயற்கை பாதிப்புக்கு மோடி அரசு இதுவரை எவ்விதமான நிவாரணம் நிதி வழங்காத. மாற்றான் தாய் மன நிலையை ராகுல் காந்தி அவர் பங்கேற்கும் எல்லா நிகழ்வுகளிலும் மீண்டும், மீண்டும் வயநாடு மக்களிடம் உங்களது சோகத்தை காங்கிரஸ் உணர்கிறது. மத்தியில் ஆட்சியில்,அதிகாரத்தில் இருக்கும் பிரதமர் மோடியை உணர வைக்க காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு வாக்கினை தாருங்கள் என்ற பிரச்சாரத்தை வலுவாக வயநாடு வாக்காளர்கள் மத்தியில் கொண்டு செல்கிறார்.
