அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புர வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை போக்குவரத்து மற்றும் மின் சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, 491 நபர்களுக்கு பணியமர்வு ஆணையினை,மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் வழங்கி பேசினார்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 107-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங் களும், தமிழ்நாடு அரசின் திட்டங்களை செயல் படுத்தும் தாட்கோ, மாவட்ட தொழில் மையம் மற்றும் திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்துகொண்டன. இன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 2931 வேலை நாடுநர்கள் கலந்துகொண்ட நிலையில், 491 நபர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டுஅவர்களுக்கு பணியமர்வு ஆணைகள் வழங்கப் பட்டன.

இந்நிகழ்வில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதாதர இயக்கம் திட்ட இயக்குநர் சு.தேன் ராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அ.கலைச்செல்வன், செந்துறை அரசு மாதிரி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ராமதாஸ், ஒன்றிய திமுக செயலாளர்கள் பூ செல்வராஜ் , பொன் செல்லம் வட்டாச்சியர் வேலுமணி,மற்றும் பலர் கலந்துகொண்டனர்.




