சிவகாசியிலிருந்து விருதுநகர் நோக்கி சென்ற தனியார் பயணிகள் பேருந்து திருத்தங்கல் புதிய பேருந்து நிலையம் அருகே சென்றபோது எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த சிவகாசி கங்காகுளத்தைச் சேர்ந்த நமச்சிவாயம் (வயது 55) என்பவர் நிலைத்தடுமாறி பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கினார். பேருந்து அதிவேகத்தில் சென்றதால் அவர் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து நமச்சிவாயம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனியார் பேருந்து டிரைவர் கண்ணனை (வயது38) திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர்.