• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதிகள்..,

ByKalamegam Viswanathan

Apr 25, 2025

மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதியன்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற கீரைத்துறை காவல்துறையினர் அங்கு மரத்திற்கு கீழ் வெள்ளை சாக்குடன் நின்றிருந்த மதுரை புதுஜெயில் ரோடு முரட்டம்பத்திரி பகுதியை சேர்ந்த சகோதரர்களான பாண்டியராஜன் மற்றும் அவரது சகோதரர் பிரசாந்த் மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தபோது 25 கிலோ உலர் கஞ்சா இலைகளை பதுக்கி வைத்திருப்பதை கண்டுள்ளனர்.

பின்னர் மூவரையும் பிடித்து விசாரித்தபோது மதுரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரௌடியான வெள்ளைக்காளியின் அண்ணன் சின்னமுனுசு மகன் சண்முகவேலு இரவு நேரத்தில் வந்து 25 கிலோ கஞ்சாவை வைத்திருக்குமாறு கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த கஞ்சாவை ஆந்திராவில் இருந்து வாங்கி வந்ததாகவும், அதன்பிறகு திருச்சியில் கஞ்சா வழக்கில் சண்முகவேல் சிறைக்கு சென்றுவிட்டார் என கூறியுள்ளனர். இதையடுத்து பாண்டியராஜன் மற்றும் அவரது சகோதரர் பிரசாந்த் மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கானது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் இன்று வழக்கின் இறுதிகட்ட விசாரணை நீதிபதி ஹரிஹரகுமார் முன்பாக விசாரணைக்கு வந்தபோது மூவர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில் பாண்டியராஜன் மற்றும் அவரது சகோதரர் பிரசாந்த் மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா ஆகிய மூவருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதனையடுத்து சிறையில் அடைப்பதற்காக காவல்துறையினர் அழைத்துசெல்ல தயாரானர்.

நீதிமன்றத்தின் உத்தரவை கேட்ட குற்றவாளிகளான பாண்டியராஜன் மற்றும் அவரது சகோதரர் பிரசாந்த் ஆகிய இருவரும் திடிரென நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு நிதீமன்றத்தின் கண்ணாடிகளை கையால் உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.