• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இன்று பிரதமர் வருகை -சென்னையில் போக்குவரத்து மாற்றம்

ByA.Tamilselvan

May 26, 2022

பிரதமர்மோடிசென்னை வரவுள்ளதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் போக்குவத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக இன்று சென்னை வரவுள்ளார். விமான நிலையம் வந்து அங்கிருந்து சாலை வழியாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அவர் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், எம்பி., எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
பிரதமர் மோடி வருகையை ஒட்டி சென்னையில் 22 ஆயிரம் போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. மேலும், சென்னையில் டிரோன்கள் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் சென்னை வருகையால் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனை தவிர்க்கும் வகையில் ஈ.வே.ரா.சாலை, சென்னை மருத்துவக் கல்லூரி சந்திப்பு, அண்ணா சாலை, எஸ்.வி.படேல் சாலை, ஜிஎஸ்டி சாலைகளில் மக்கள், வாகன ஓட்டிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்த வழிகளை தவிர்த்து மாற்று வழியில் பயணம் செய்ய வாகன ஓட்டிகள் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.