• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி பங்கஜ்பாய் மோடி கன்னியாகுமரியில்…

கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக குறைந்துள்ள நிலையில், பகவதி அம்மன் கோயில் மற்றும் கடற்கரை பகுதிகள், பூம்புகார் படகு துறை எங்குமே சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்த போது, மதியம் 12 மணிக்கு காவல்துறை வாகனங்கள் பாதுகாப்புடன், கட்சி கொடி எதுவும் இல்லாத சொகுசு வாகனம் ஒன்று பகவதியம்மன் கோவிலுக்கு வந்தது.

சொகுசு வாகனத்தில் வந்த ஒருவர் தனியாக காரை விட்டு இறங்கி பகவதியம்மன் கோவிலுக்கு செல்ல காவலர்களும் பாதுகாப்பாக உடன் சென்றனர். குமரியை சேராத வெளியூர் காவல்துறை அதிகாரி மற்றும் ஆய்வாளர் நிலையில் உள்ளவர்கள் பாது காப்பாக இருந்தனர். பகவதியம்மனை தரிசித்துவிட்டு, மூன்று கடல்கள் சங்கம பகுதிக்கு சொகுசு வாகனத்தில் வந்தவர் சென்றபோது, காவல்துறை காவலர்கள் மட்டும் அல்லாது, சுற்றுலா காவலர்களும் உடன் பின் தொடர்ந்த நிலையில், இவர் யார்.?
இன்ஸ்பெக்டர் சீர் உடையில் இருந்தவரிடம் விசாரித்த போது, அவர் பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி பங்கஜ்பாய் மோடி, திருச்சிக்கு வந்தவர் அங்கிருந்து ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை தரிசனம் செய்தவர், நேற்று இரவில் ராமேஸ்வரத்தில் தங்கியவர் இன்று காலை ராமோஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரி வந்து, பகவதி அம்மனை தரிசித்து வந்தவர். கன்னியாகுமரி முக்கடல் புனித தீர்த்தம் பகுதியை பார்வையிட்டார். பிற்பகல் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டமத்திற்கு சென்று விட்டு மீண்டும் திருச்சி செல்வதாக தெரிவித்தார்.

திருவேணி சங்கம் பகுதியில் வைத்து பிரதமர் மோடியின் தம்பி பங்கஜ்பாய் மோடியிடம் பத்திரிகையாளன் என அறிமுகப்படுத்திக் கொண்டு பேச முயன்ற போது, அவருடன் இருந்த உதவியாளர் புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் எவ்வித சம்பாசனையும் வேண்டாம் என தெரிவித்தார்.