உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
7 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்காகப் பிரசாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். மூன்றாவது முறையாக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், வாரணாசி ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடி வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிரதமரின் வேட்புமனுவை 4 பேர் முன்மொழிந்து கையெழுத்திட்டனர். பிரதமர் வேட்புமனு தாக்கல் செய்தபோது மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வாரணாசி தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்
