இஸ்லாமியர்கள் அனைவரின் எல்லா முயற்சிகளிலும் வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்கட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்களால் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் ரம்ஜான் வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், “புனித ரமலான் நம் சமூகத்தில் நம்பிக்கை, நல்லிணக்கம், கருணை ஆகியவற்றை மேம்படுத்தட்டும். இஸ்லாமியர்கள் அனைவரின் எல்லா முயற்சிகளிலும் வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்கட்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.