• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பி.வி.சிந்துவிற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி…

Byகாயத்ரி

Mar 28, 2022

சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் நேற்று நடந்த இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் தாய்லாந்து நாட்டின் பூசணன் ஓங்பாம்ரங்பான் ஆகியோர் விளையாடினர்.

இதில், பி.வி.சிந்து, 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் பூசணனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்நிலையில், பி.வி.சிந்து பெற்ற வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சுவிஸ் ஓபன் 2022ல் வெற்றி பெற்றமைக்காக சிந்துவுக்கு என்னுடைய வாழ்த்துகள். அவரது வெற்றிகள் இந்தியாவின் இளைய சமூகத்தினருக்கு ஊக்கம் ஏற்படுத்தும். வருங்காலத்திலும் அவரது முயற்சிகளுக்காக என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.