நாகர்கோவில் பிரஸ் கிளப் 22 வது ஆண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி, மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாவட்ட எஸ்.பி. டாக்டர் ஸ்டாலின், வடக்கன்குளம் ஜாய் கல்லூரி நிர்வாகி டாக்டர் ஜாய் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் மாவட்டம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.




