• Wed. Apr 24th, 2024

ஜனாதிபதி திரவுபதி முர்மு
திருப்பதி செல்கிறார்

ஜனாதிபதியாக பதவியேற்று திருப்பதிக்கு முதல் முறையாக திரவுபதிமுர்மு நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) என 2 நாட்கள் வருகை தந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திருப்பதிக்கு வரும் ஜனாதிபதி திரவுபதிமுர்முவுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டி தலைமை தாங்கி பேசுகையில், ஜனாதிபதி திருப்பதி வருகிறார். அதற்காக ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். ஜனாதிபதி விசாகப்பட்டினத்தில் இருந்து இன்று புறப்பட்டு இரவு 8:40 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்தை அடைகிறார். இரவு 9.25 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு திருமலையை அடைகிறார். திருமலையில் தங்கி ஓய்வெடுத்ததும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9.25 மணிக்கு வராஹ சுவாமி கோவில், வெங்கடாசலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதியை அடைகிறார். திருப்பதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டு கொண்டார் இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *