இந்தியாவின் தென்கோடி முனைக்கு கன்னியாகுமரி என பெயர் காரணம்
கன்னி தெய்வம் பகவதியம்மன் கோவில் கொண்டதே ஊரின் பெயரான
கன்னியாகுமரி என்பதின் காரணம்.

ஒரு செய்தியை தொடர்ந்து வரும் ஒரு பழமையான. பகவதியம்மன் கோவில் கொண்டிருக்கும் இடத்தில் கூப்பிடும் தூரத்தில் இருக்கும் சின்னம் சிறிய மீனவ கிராமம் “வாவத்துறை” அந்த காலத்தில் விரல்விட்டு எண்ணும் எண்ணிக்கையில் வீடுகள் உள்ள இந்த சின்ன மீனவர் வசிக்கும் குடும்பத்தின் அடையாள பெயர் கைலியார் குடும்பம்.
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியின் போது எந்த மன்னரின் ஆட்சிக்காலம் என்று என தெரியாத காலம் தொட்டே இன்றுவரை.மீனவகுடும்பத்தின் வழி,வழி உரிமை.

குமரி பகவதியம்மன் கோவில் திருவிழா கொடி கயிறு கொடுக்கும் உரிமை கைலியார் குடும்பத்தின் தனித்த பெருமை மிக்க உரிமை.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் மேலாளர் ஆனந்தன் தலைமையில். கோவில் திருவிழா கொடி கயிறு கொடுக்கும் கைலியார் என்னும் மீனவர் வீட்டிற்கு சென்று. கொடிகயிற்றை சுமந்து வரும் வாரிசுக்கு முதல் மரியாதை செய்து, தீ வெட்டி ஒளியில் நாதசுவரம், மேளம் முழங்க.மீனவ கிராமம் வாவத்துறையில் இருந்து பகவதியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
குமரி திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா.ஜி.ராமகிருஷ்ணன் கொடி கயிற்றை கைலியார் குடும்பம் வாரிசிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

கன்னியாகுமரியை சேர்ந்த காலம் சென்ற பிச்சு மணி சார்பில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ரூ.3_லட்சம் மதிப்பிலான தேர் பட்டத்தை காணிக்கையாக செலுத்தினர். குமரி பகவதியம்மன் கோவில் மேலாளர் ஆனந்திடம் இரண்டு நிகழ்வுகளும் சம காலத்தில் நடைபெற்றது.