• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் ஆயத்த கூட்டம்

Byp Kumar

Mar 29, 2023

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆயத்த கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள பத்திரிக்கையாளர் அரங்கத்தில் மண்டல அளவிலான ஆயத்த கூட்டம் நடத்தினர். குறிப்பாக தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பணியாளர்களது கோரிக்கை, கடன் தள்ளுபடி சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் நடைமுறை சிரமங்கள் ஆகியவற்றை கலைந்திடும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் வரும் ஏப்ரல் 3ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அனைத்து பணியாளர்களும் கலந்து கொள்ளும் வகையில் பேரணி நடத்துவது மற்றும் கோரிக்கைகள் நிறைவேற்ற வில்லை என்றால் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று அனைத்து பணியாளர்களும் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் சுமார் ஒரு லட்சம் பேர் கொண்ட மிகப்பெரிய பேரணியை சென்னையில் நடத்தி கூட்டுறவு துறை அமைச்சர் மூலம் முதலமைச்சர் அவர்களுக்கு நேரில் கோரிக்கை மனு வழங்குவது குறித்த ஆலோசனை மற்றும் ஆயத்த கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை தேனி சிவகங்கை இராமநாதபுரம் விருதுநகர் தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் காமராஜ் பாண்டியன் பேசும்போது,


தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் குழு கடன் பயிர் கடன் நகை கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு தற்போது வரை அந்த தொகை சங்கங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை எனவே இந்த கடன் தொகைகளை வட்டியுடன் செலுத்த வேண்டும். செயலாளர்களுக்கு குறைகளை நீக்கி சீர் செய்ய வேண்டும் தணிக்கை துறையை பொறுத்தவரை கூட்டுறவு துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும். அல்லது பட்டய தணிக்கைக்கு அனுமதிக்க வேண்டும். சங்கங்களுக்கு தேவையற்ற இயந்திரங்கள் உபகரணங்கள் வழங்குவதற்கு திர்மதிக்கப்படுவதை கைவிட வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு ஊதிய உயர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பேரணி மற்றும் மாபெரும் பேரணி நடத்த உள்ளோம் என்று தெரிவித்தனர்.