• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டையில் கர்பிணி
பெண்களுக்காக அரசு சார்பில் விழா

புதுக்கோட்டையில் கர்பிணி பெண்களுக்காக அரசு சார்பில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி புதுக்கோட்டையில் உள்ள கற்பகவினாயகா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.
இவ்விழாவைப் பொறுத்தவரை சுமார் 350 கர்பிணி பெண்கள் கலந்துகொண்டனர். இது மிகப்பெரிய விழாவாக நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் துறைகளில் ஒன்றான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கக்கூடிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தால் நடத்தப்பட்ட இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு அவர்கள் முன்னிலையில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்துகொண்டு விழாவினைத் துவக்கி வைத்தார். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, நகர் மன்றத்தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்றத் துணைத்தலைவர் லியாகத்அலி மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, திட்ட அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் கலந்துகொண்ட கர்பிணி பெண்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு புதுக்கோட்டை விராலிமலை பகுதியைச் சேர்ந்த திருநங்கை வர்சாவின் நடனம் மிகச்சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.