விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சியில் ரூ.2.90 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட காந்திஜி நூற்றாண்டு பேருந்து நிலைய திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொலி வாயிலாக பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.

பேருந்து நிலையத்தில் முதல் பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் ராமச்சந்திரன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார். தற்போது பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பாதிப்பில் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார், எம்.எல்.ஏ தங்கபாண்டியன் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷ்யாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இராஜபாளையம் பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறை, 23 கடைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, 2 உணவகங்கள், 7 பேருந்துகள் நிறுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.