• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

புனித வெள்ளி இறைவழிபாட்டில் தவக்கால விரதத்தை நிறைவேற்றி பிராத்தனை…

ByR. Vijay

Apr 19, 2025

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி   பேராலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி இறைவழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஏசுவின் பாதத்தில் முத்தமிட்ட கிறிஸ்தவர்கள், தவக்கால விரதத்தை நிறைவேற்றி பிராத்தனை செய்தனர்.

இயேசு கிறிஸ்து உயிர்தொழுந்ததை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அந்நாளை இறைவழிபாட்டுடன் தொடங்குகின்றனர். இதையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் இன்று புனித வெள்ளி இறைவழிபாடு  அனுசரிக்கப்பட்டது. திருப்பலியினை பேராலய அதிபர் இருதயராஜ் நிறைவேற்றினார்.

அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதாரின் பாதத்தில் முத்தமிட்டு தங்களது தவக்கால வேண்டுதலை பிராத்தனையுடன் நிறைவேற்றி கொண்டனர்.

வரும் ஞாயிற்றுகிழமை இயேசு உயிர்த்தெழுந்த தினத்தை உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாட உள்ளனர். இதில் கலந்து கொள்வதற்காக  தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில்  குவிந்துள்ளனர்.