மதுரை மாநகர காவல் துறையில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டிகண்ணன் மற்றும் தலைமை காவலர் தளபதி பிரபாகரன் ஆகியோர் 24.09.2025 அன்று காலை மதுரை யானைக்கல் பகுதியில் வாகன சோதனை அலுவல் செய்து வந்த போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் திருடப்பட்ட இருசக்கரத்தையும் வாகனத்தை திருடிய மதுரை சம்மட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் என்பவரது மகன் கார்த்திகேயன் வயது 35 என்பவரை லாபகமாக மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில் மேற்படி வாகனம் திருட்டு வாகனம் தெரிய வந்ததும் மேலும் திருப்பூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வாகன சோதனை அலுவலில் சிறப்புடன் பணிபுரிந்து இருசக்கர வாகனத்தையும் திருடிய நபரையும் பிடித்ததற்கு பாராட்டும் விதமாக மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி சிறப்பித்தார்.