• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிரபாஸ் நடிக்கும்ஆதிபுருஷ் போஸ்டர் வெளியீடு சர்ச்சையை ஏற்படுத்துமா?

Byதன பாலன்

Mar 31, 2023

சினிமாவில் அதிகபட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வரும்படங்களில் பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் இடம்பெற்றுள்ளது.
இந்த திரைப்படம் 2023ஜூன்
மாதம் 16ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஐமேக்ஸ் மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகும் இந்த படத்தைஇயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ளார்இதில் பிரபாஸ் உடன் கிருத்தி சனோன், சையீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தர்மம், தைரியம், தியாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்ரீ ராமரின் நல்லொழுக்கத்தை மையப்படுத்தி இத்திரைப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.நன்மையின் தொடக்கத்தை குறிப்பிடும் வகையில் ஸ்ரீராமரின் பிறந்தநாள் ராமநவமி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது அதனையொட்டி ராமாயண காவியத்தை தழுவி தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் தெய்வீகம் ததும்பும் புதிய போஸ்டரை பட குழுவினர் நேற்று வெளியிட்டிருக்கிறார்கள். படக்குழு வெளியிட்டிருக்கும் போஸ்டரில் ஸ்ரீ ராமராக பிரபாஸ், சீதா தேவியாக கிருத்தி சனோன், லக்ஷ்மணனாக சன்னி சிங், அனுமனாக தேவதத்தா நாகே ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இந்திய சினிமாவில் அதிகபட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வரும்படங்களில் பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் இடம்பெற்றுள்ளதுஇந்த திரைப்படம் 2023ஜூன் மாதம் 16ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.