• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பிரபாகரன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்!!

ByA.Tamilselvan

Feb 14, 2023

விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் என்று திருச்சி வேலுச்சாமி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபாகரன் பற்றிய அவதூறுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். பிரபாகரன் பற்றிய உண்மையை கூற இருக்கிறேன். பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார். பிரபாகரன் குடும்பத்தினருடன் தொடர்பு இருக்கிறது. பிரபாகரனின் அனுமதியுடன் இதனை வெளிபடுத்துகிறேன் என்று கூறினார்.

இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்வினையாற்றினர். இலங்கை ராணுவம் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் பழ.நெடுமாறன் கூறியது உண்மைதான் என்று திருச்சி வேலுச்சாமி தெரிவித்துள்ளார். ஜெர்மனி சென்றிருந்த போது பிரபாகரனுடன் சேர்ந்து தப்பித்த ஒருவரை சந்தித்ததாக அவர் கூறியுள்ளார். அப்போது தலைவர் உயிரோடு இருக்கிறாரா என்று கேட்டதற்கு, அவர் சிரித்துக் கொண்டே ஆம் என்று கூறினார், என்று அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பிரபாகரன் தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் என்றும் வேலுச்சாமி கூறியுள்ளார்.