பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்த நிலையில் அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்
2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவம் இடையே இறுதிகட்ட போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அவரது உடலையும் காட்டியது.ஆனால், புலிகளின் தீவிர ஆதரவாளர்களான பழ.நெடுமாறன் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவே கூறி வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன், பிரபாகரன் தொடர்பான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரபாகரன் பற்றிய அவதூறுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். பிரபாகரன் பற்றிய உண்மையை கூற இருக்கிறேன். பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார். பிரபாகரன் குடும்பத்தினருடன் தொடர்பு இருக்கிறது. பிரபாகரனின் அனுமதியுடன் இதனை வெளிபடுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.விடுதலை புலிகள் பிரபாகரன் நலமுடன் இருப்பதாக உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.பிரபாகரன் குடும்பத்துடன் தொடர்ப்பில் இருப்பதால் இதனை நான் அவர்கள் அனுமதியுடன் கூறுகிறேன்.அவர் தக்க சமயத்தில் வெளிப்படுவார் என்று கூறினார்