சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் ஆணைப்படியும், திருச்சிராப்பள்ளி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அறிவுறுரையின்படியும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க முகாம் வார்டு எண்.12, மல்லான் கோவில் பகுதியில் நடைப்பெற்றது.
பேரூராட்சி மன்ற தலைவர் சு.சங்கீதா தலைமையிலும், துணைத்தலைவர் சி.சுதா முன்னிலையிலும் நடைப்பெற்றது. நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்தும் அதன் செயல்பாடுகளை குறித்தும் செயல் அலுவலர் ச.சாகுல் அமீது மக்களிடையே விளக்க உரையாற்றினார். அதில் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பைகள் என தரம் பிரிப்பது பற்றியும். மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் இதர மறுசுழற்சி பொருட்களை சேகரம் செய்து பிரித்து தினசரி சேகரம் செய்ய வரும் தள்ளுவண்டி தூய்மை பணியாளர்களிடம் வழங்கவும் அறிவுறுத்தினார்.
பொதுமக்கள், தன்னார்வளர்கள், தூய்மை பணியாளர்கள் அனைவரும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடர்பான உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். 12வார்டு பகுதியில் உள்ள முக்கிய இடங்களில் தீவிர தூய்மைபணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், பேரூராட்சியின் பொது இடங்களான பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தங்கள், அரசு அலுவலக கட்டிடங்கள், பொது சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டன. பேரூராட்சி பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன. இந்நிகழ்வில் 12வது வார்டு உறுப்பினர் ராணி, இளநிலை உதவியாளர் சித்ரா, துப்பரவு பணிமேற்பார்வையாளர்(பொ) கண்ணன், தன்னார்வலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.