• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

போஸ்ட் ஆபீஸ் ஊழியர் வீட்டில் ரூ.1.80 லட்சம் கொள்ளை…

Byஜெபராஜ்

Dec 25, 2021

புளியங்குடியில் போஸ்ட் ஆபீஸ் ஊழியர் வீட்டில் நள்ளிரவில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணம் கொள்ளை.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டிஎன் புதுக்குடி சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது 27 போஸ்ட் ஆபீஸ் ஊழியர். இவர் வீட்டில் அவரது அம்மா ஈஸ்வரி தம்பி கணேசன் ஆகியோர் தூங்கி கொண்டிருந்த போது சுமார் இரண்டு மணிக்கு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து பேக்கில் இருந்த 1,80,000 பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளான் பின்பு பக்கத்து ராமையா மகன் சங்கரலிங்கம் பழனியம்மாள் ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் கதவை இலேசாகத் திறந்து பார்த்துள்ளது தெரிய வந்துள்ளது.


இதுகுறித்து புளியங்குடி காவல் நிலையத்தில் சுப்பிரமணியன் புகார் கூறினார். புகாரை விசாரித்த புளியங்குடி போலீசார்அருகிலுள்ள சிசிடிவி வீடியோ காட்சிகளைப் பார்த்தபோது இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த தெருவை சுற்றி வந்து உள்ள நபர் சுமார் 19 வயதுள்வராகவும் வெள்ளைச் சட்டையும் அணிந்து இருப்பது தெரியவந்துள்ளது புகாரின்பேரில் புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.