• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மின் வாரிய அலுவலக கழிப்பறையில் ஆபாச படம்..,

ByKalamegam Viswanathan

Sep 26, 2025

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பரவை பவர் ஹவுஸ் மின் கோட்ட அலுவலகத்தில் nமதுரை செல்லூர் அருன்தாஸ் புரத்தை சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரன் (வயது33). வணிகப்பிரிவு ஆய்வாளராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர் ஒருவர் அங்குள்ள கழிப்பறைக்குச் சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து ராஜ ராஜேஸ்வரன் சென்று அந்த பெண் இயற்கை உபாதை கழிப்பதை ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனே ராஜராஜேஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடிச் சென்று எதுவும் நடக்காதது போல் தன் இருக்கையில அமர்ந்துள்ளார். இது பற்றி அந்தப் பெண் சக பெண் ஊழியர்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்து பின் மின் கோட்ட பொறியாளரிடமும் கூறியுள்ளார்.

அவர் சந்தேகத்தின் பேரில் ராஜராஜேஸ்வரன் செல்போனை வாங்கி பார்த்த போது அந்த அலுவலகத்தில் பணிபுரியும் சகப் பெண் ஊழியர்களை ஆபாசமாக கழிவறை உள்ளிட்ட பல இடங்களில் படம் பிடித்த ஏராளமான வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மின் கோட்ட செயற்பொறியாளர் கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா, சப் இன்ஸ்பெக்டர் மெகராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ராஜ ராஜேஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மதுரை சமயநல்லூரில் மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய அலுவலர் பெண்கள் கழிவறையில் செல்போனில் படம் எடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது