• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிரபல சின்னத்திரை நடிகர் சாலை விபத்தில் பலி

ByP.Kavitha Kumar

Jan 18, 2025

பிரபல சின்னத்திரை நடிகர் அமன் ஜெய்ஸ்வால் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பல்லியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் நடிகர் அமன் ஜெய்ஸ்வால். கடந்த 2023-ம் ஆண்டு ஒளிபரப்பான ‘தர்திபுத்ரா நந்தினி’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர். இந்த சீரியலில் அமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கு முன், ‘உதரியான்’ மற்றும் ‘புண்யஷ்லோக் அஹில்யாபாய்’ என்ற தொடர்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

இவர் ஹுட்டிங்கிற்காக சென்று கொண்டிருந்த போது, மும்பை ஜோகேஸ்வரி நெடுஞ்சாலையில் அவரது இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியது.இதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அமன் ஜெய்ஸ்வால் விபத்தில் உயிரிழந்த சம்பவம் ரசிகர் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.