உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல் நல குறைவு காரணமாக கடந்த 21_ம் தேதி மரணமடைந்தார்.
காலம் காலமாக உச்சரிக்கப்படும் ஒரு ஒற்றை சொல் சாலைகள் எல்லாம் வத்திக்கானை நோக்கியே செல்கிறது என்ற சொல் பதத்தை உண்மையாக்குவது போன்று.

மறைந்த போப் பிரான்சிஸ் உடலை கடைசியாக தரிசித்து விடவேண்டும் என்ற உணர்வில் உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க மக்களின் கண்கள் எல்லாம் வத்திகானை கண்களில் வழியும் விழிநீருடன் பார்த்து நிற்கிறது.
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் சாந்தா மார்த்தா தேவாலயத்திற்கு ஊர்வலமாக ரோம் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்திலிருத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
புனித பீட்டர் தேவாலயத்தில் மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று இறுதி அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.
புனித சாந்தா மார்த்தா ஆலயம் வளாகத்தில் எதிர் வரும் ஏப்ரல் 26_ம் தேதி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு போப் பிரான்சிஸ் இறுதி சடங்கில் பங்கேற்க பல்வேறு நாடுகளிலும் இருந்து தலைவர்கள் ரோம் நோக்கிய பயணத்தில் இருக்கிறார்கள்.
போப் பிரான்சிஸ் இறுதி சடங்கில் உலகத்தலைவர்கள், உலகம் முழுவதும் இருந்து கிறிஸ்தவ மக்கள் ரோம் நோக்கிய பயணம் என்பதின் தகவலோடு வெளி வந்துள்ள தகவல்.போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்வில் 12_லட்சம் பேர் பங்கேற்க உள்ளார்களாம்.