• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

போப் பிரான்சிஸ் மக்கள் சமுகத்தில் இருந்து விடை பெற்றார்..,

இந்தியாவின் தென்கோடி குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க கிறித்தவ மக்கள் பெரிய எண்ணிக்கையில் வாழ்கிறார்கள்,இதனை கடந்து கிறிஸ்தவத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்களும் வாழும் பகுதி.

கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான எட்டுத்திக்குகளிலும், உயர்ந்த கோபுரங்களில் புனித சிலுவையை தாங்கிய தேவாலயங்கள் 300_க்கும் அதிகமாக உள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களை உள்ளடக்கிய. கோட்டார், குழித்துறை என இரண்டு மறைமாவட்டங்களை உள்ளடக்கியது குமரி மாவட்டம். போப் பிரான்சிஸ் வாடிகன் உள்ளூர் நேரப்படி நேற்று (ஏப்ரல் 21) காலை 7.35_ மணிக்கு காலமானதாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்த அடுத்த நொடி.

உலகப்பந்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தேவாலயங்களில் “துக்க”மணி ஓங்கி ஒலித்து உலகினரது துக்கத்தோடு சங்கமித்தது.

கோட்டார் மறைமாவட்டத்தின் சார்பில். ஆயர் இல்லத்தில்.
மறைமாவட்ட ஆயர் முனைவர் நசரேன் சூசை போப் பிரான்சிஸ் திருவுருவ புகைப்படத்திற்கு மலர் தூவி குமரியின் அஞ்சலியை செலுத்தியது போல்.

கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்பணி உபால்ட். போப் பிரான்சிஸ் மறைவுக்கு பங்கு மக்களின் சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

போப் பிரான்சிஸ் அண்மையில் சில காலம் உடல்நலக் குறைவால் மருத்துவ மனையில் உரிய சிகிச்சை எடுத்து நலம் பெற்று மீண்டும்,இறை இயேசுவிற்கான மறை பணியில் ஈடுபட்டார்.

இயேசுவின் உயிர்ப்பு தினத்தில் வடிகானில் கூடிய கூட்டத்தினர் இடையே இயேசு நல்கும் சமாதானம் அனைவருடனும் இருக்க பிரார்த்தனை செய்த போப் பிரான்சிஸ் அதற்கு அடுத்த நாள் மூச்சு திணராலால் உயிர் பிரிந்தது கேட்டு உலக கிறிஸ்தவ சமுகம் சோகத்தில் ஆழ்ந்தது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் மூன்று நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

போப் பிரான்சிஸ் உலகளவில் போர்கள் ஒழிந்து,அமைதி வேண்டும் என வலியுறுத்தியவர்.

குடியேறிகளை பெருமளவில் நாடு கடத்துவதற்கான, அமெரிக்கா அதிபர்
“டிரம்பின்” திட்டத்தை ஒரு அவமானம் என துணிச்சலாக கண்டித்தார். கடந்த காலங்களில் போப் மறைவின் போது கடைபிடிக்க பட்ட முறைமைகள் இம்முறை மாறியுள்ளது. எளிய மரப்பெட்டியில் தனது உடலை அடக்கம் செய்யும் முன்.பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக பெட்டியின் மேல் மூடி திறந்த நிலையில் இருக்க வேண்டும்.

வத்திகனுக்கு வெளியே நல்லடக்கம் செய்யவேண்டும்
என்ற விருப்பத்தை போப் பிரான்சிஸ் எழுதிவைத்திருந்திருக்கார். அவரது விருப்பத்தை கருதினார்கள் ஏற்று அதன் படி செயல்படவுள்ளார்கள்.

இம்முறை ஆசியாவிலிருந்து ஒரு போப் வரலாம் என வெண்புகை சொல்லுமா.?
பிலிப்பைன்சை சேர்ந்த கர்தினால் லூயிஸ் அந்தோணியா கோகிம்
தாகலேயாக இருக்குமா? ஆசியா காத்திருக்கிறது.