• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ரூ.500 கோடி வசூலை நெருங்கும் பொன்னியின் செல்வன்

ByA.Tamilselvan

Oct 20, 2022

பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 500 கோடி வசூலை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய அதே பெயரில் பிரபலமான தமிழ் இலக்கிய நாவலை அடிப்படையாகக் கொண்டது. புத்தகத்தை படித்தவர்கள் படம் அப்படியே உள்ளது என மனதார பாராட்டியுள்ளார்கள்.
மணிரத்னம் அவரது சினிமா பயணத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கி சாதனை செய்துவிட்டார். அத்தனை புத்தகங்களை எப்படி இவர் இரண்டு பாகங்களாக எடுத்தார் என்ற ஆச்சரியம் மக்களிடம் உள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது மூன்றாவது வாரம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் தற்போது உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல் செய்து சாதனை படைக்க உள்ளது
வார இறுதியில் படத்தின் வசூல் சரிவைக் கண்டது. பொன்னியின் செல்வன் தீபாவளி ரிலீஸுக்கு முன் தமிழகத்தில் தடையின்றி திரையரங்குகளில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளிலும் இப்படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.வர்த்தக அறிக்கையின்படி, பொன்னியின் செல்வன் பாகம் 1 உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 500 கோடியை நெருங்கி வருகிறது. அதே போல் தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன், சியான் விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி மற்றும் கார்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் மற்றும் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.
தற்போது படத்தை அதிகம் புக்கிங் செய்து வருகிறார்கள், தீபாவளி விடுமுறை வேறு வருகிறது. வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியான இந்த திரைப்படத்தை மேலும் சில நாட்கள் திரையரங்குகளில் ஒளிபரப்ப திரையரங்குகள் முடிவு செய்துள்ளார்களாம். இதுவரை படம் உலகம் முழுவதும் ரூ. 460 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.டிசம்பர் 21 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் ஆகிய படங்கள் வெளியாகுவதால் பொன்னியின் செல்வன் பட வசூல் சற்று குறையும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தீபாவளி விடுமுறை முடிந்ததும் பட வசூல் ரூ. 500 கோடி தாண்டி சாதனை படைக்கும் என்கின்றனர்.