விருதுநகர் தெற்கு மாவட்டம், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களின் ஆலோசனைப்படி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி சிறப்பாக நடைபெற்றது.

இந்த திட்டத்தின் கீழ் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீள கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன. தமிழர் திருநாளான பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசு வழங்கிய இந்த உதவி பொதுமக்களுக்கு பெரும் ஆதரவாக அமைந்தது.

இந்த நிகழ்வில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயபாண்டியன், மேற்கு ஒன்றிய பொருளாளர் விவேகானந்தன்,ஒன்றிய துணைச் செயலாளர் சந்தனம், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கணேசன், மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நேரில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினர்.

அரசின் மக்கள் நலத் திட்டங்களை கடைசி நபர் வரை கொண்டு செல்லும் நோக்கில் இப்பணி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர். பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெற்றுக் கொண்ட பயனாளிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.




