• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொங்கல் பரிசு திட்டம்:
முதல்வர் நாளை ஆலோசனை

பொங்கல் பரிசு திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்தது. அந்த கூட்டத்தொடரை சமீபத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி முறைப்படி முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் வருகிற ஜனவரி மாதம் மீண்டும் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. கவர்னர் உரையுடன் இந்த கூட்டத்தொடர் தொடங்கும். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பரிசாக 1,000 ரூபாயை வழங்குவதற்கான திட்டத்தை தமிழக அரசு வகுத்துள்ளது. இதை வழங்குவதற்கான நடைமுறை குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக நாளை (திங்கட்கிழமை) தலைமைச் செயலகத்தில் அனைத்து அமைச்சர்களையும் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக இடம் பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார். தமிழக சட்டசபை
கூட இருக்கும் தேதி, கவர்னர் உரையில் இடம் பெறும் கருத்துகள் ஆகியவை பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.