• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள லிஸ்யூ மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழா..!

BySeenu

Jan 14, 2024

கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள லிஸ்யூ மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவ, மாணவிகளுடன் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

தமிழர் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையை தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள லிஸ்யூ மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம் களை கட்டியது. விழாவையொட்டி பள்ளி நுழைவு வாயிலில் வண்ண கோலமிட்டு, கரும்பு தோரணங்கள் அமைத்து ,பள்ளியின் முன்பாக சுமார் நூறுக்கும் மேற்பட்ட பானைகள் வைத்து மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து கும்மியடித்து, குலவையிட்டு கொண்டாடினர்.

தொடர்ந்து காளை மாடுகள் வரவழைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. விழாவில், உரியடித்தல், சிலம்பாட்டம், தப்பாட்டம், மாடாட்டம், கும்மி, ஒயிலாட்டம், நாட்டுப்புற நடனங்கள் என தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, லிஸ்யூ கல்லூரியின் இயக்குனர் சாஜு பெல்லிசேரி மற்றும் ஓரி அக்ரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அனூப் ஆண்டனி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். முன்னதாக பொங்கல் விழா குறித்து பள்ளியின் முதல்வர் ஜோய் ஆரக்கல் கூறுகையில், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் தமிழர் பாரம்பரிய விழாக்களை தெரிந்து கொள்ளும் விதமாக இந்த விழாவை கிராமத்தில் நடக்கும் பொங்கல் விழாவை போல நடத்தியுள்ளதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில், மாணவ,மாணவிகளுடன் அவர்களது பெற்றோர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பாரம்பரிய உடைகளுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.