• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆட்டம் பாட்டத்துடன் மதுரை சேது பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா

Byp Kumar

Jan 14, 2023

மதுரை சேது பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா மாணவர்கள் மாணவிகள் ஆட்டம் பாட்டத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது
மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் தைத்திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் எஸ். முகமது ஜலீல் தலைமை தாங்கினார் நிர்வாக அதிகாரிகள் எஸ்.எம்.சீனி முகைதீன் , எஸ் .எம் .சீனிமுகமதுஅலியார் திருமதி நிலோபர்பாத்திமா. திருமதி நாசியாபாத்திமா முன்னிலை வகித்தனர்.

முதல்வர் செந்தில்குமார் தலைமையில் பேராசிரியர்கள் மாணவர்கள் ஒருங்கிணைத்து 13துறைகளைச் சார்ந்த பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து படையலிட்டுதேங்காய் உடைத்து வணங்கினர்கள் . கல்லூரி நிறுவனர் எஸ் முகமது ஜலில் பார்வையிட்டு வாழ்த்துரை வழங்கினார். மாணவர்களின் பாரம்பரியமிக்க கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது இந்த கலைநிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் விழாவினை கொண்டாடினர். இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் . விழாவினால் மதுரை சேது பொறியியல் கல்லூரி விழா கோலமாக காணப்பட்டது