மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட நியாய விலை கடைகளில் பொது மக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்ட முறையில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. பேருந்து நிலையம் அருகில் உள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை பேரூராட்சி தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன் வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி 9வது வார்டு கவுன்சிலர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அதிகாரிகள் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
