கோவை ஈச்சனாரி பகுதியில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவர்கள் ஒன்று கூடி தமிழர் பாரம்பரிய முறைப்படி அடுப்பில் பொங்கல் வைத்து, நடனமாடி மகிழ்ந்தனர்.
தமிழர்கள் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.

போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் இந்த பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்..
இதன் ஒரு பகுதியாக கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் கல்லூரியில் மகிழ் எனும் தலைப்பில் தமிழர் பாரம்பரிய உடைகளான வேட்டி,சேலை அணிந்த மாணவர்கள் உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்..
கல்லூரியில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களும் பொங்கல் பண்டிகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொண்டாடினர்.
மேலும் தமிழர்கள் கலையான தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடி ஆட்டம், கரகாட்டம், கும்மி ஆட்டம் போன்றவற்றை மாணவிகள் ஆடினர்.
இந்த நிகழ்ச்சியில் காளைகள், குதிரைகள் வரிசையுடன் பண்பாட்டுத் திருவிழாவாக நடைபெற்ற விழாவில் வீர விளையாட்டுகளும் இடம் பெற்றது

இதனால் மகிழ்ச்சி அடைந்த பிற மாணவிகளும் ஆர்வமுடன் நடனம் ஆடினர்.
அதன் பின்னர் மாணவிகள் கண்ணை கட்டிக்கொண்டு உறியடி நடத்தினர்.
ஆடு,மாடுகளுக்கு பொங்கல் ஊட்டியும் கறவை மாடு,காளை மாடு என கிராமத்தை மிஞ்சும் அளவிற்கு கல்லூரி வளாகத்தில் பொங்கல் பண்டிகை களை கட்டியது..
அதே போல் மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை கொண்டு கடைகளும் அமைத்திருந்தனர்.




