• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிமுக நிர்வாகி மீது தவறான தகவலை பரப்புவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்..,

ByKalamegam Viswanathan

Mar 24, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புரத்தைச் சேர்ந்த விருகை தர்மர் இவர் சென்னையில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் மீது இவரது குடும்பத்தினர் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும் விசாரணைக்கு வராமல் வழக்கறிஞர்கள் மூலம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சிலர் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருவதாக தெரிகிறது.

இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட விருகை தர்மரை நேரில் தொடர்பு கொண்டு கேட்டபோது தன் மீது எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இவரின் அரசியல் எதிர்காலத்தை சீர்குலைக்கும் வகையில் ஒரு சிலர் விருகைதர்மர் குறித்து பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இது இவரின் புகழுக்கும் இவர் சார்ந்து உள்ள அரசியல் இயக்கத்திற்கும் களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இனிமேலும் விருகை தர்மர் மீது சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிகைகள் ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பினால் அவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று விருகை தர்மர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.