உள்துறை அமைச்சர் தங்கி உள்ள ஹோட்டலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவிநாசி சாலை நவ இந்தியா பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கி உள்ள நிலையில் இங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு துறையினரும், மாநகர காவல் துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
11 மணி அளவில் அமித்ஷா இங்கு இருந்து புறப்பட்டு பீளமேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பா.ஜ.க அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் இந்த ஹோட்டலுக்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.
அமித்ஷா வருகையை ஒட்டி கோவை விமான நிலையம் மற்றும் மாநகர முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பாரதிய ஜனதா கட்சி அலுவலக கட்டிடம், அவர் தங்கி இருக்கும் நட்சத்திர ஹோட்டல், ஈசா யோகா மையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தமிழக கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் தேவாசிரிவாதம் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.