• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

மேம்பாலத்தில் தற்கொலைக்கு முயன்ற இளைஞரை காப்பாற்றிய போலீசார்..

ByKalamegam Viswanathan

Mar 20, 2025

திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் முதல் நிலை காவலர் அய்யனார் சாமர்த்தியமாக பேசி தற்கொலைக்கும் இயன்ற இளைஞரை காப்பாற்றிய நெகிழ்ச்சி நிகழ்ச்சி.

திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள நிலையூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் குட்டி கமல் (வயது 27 ) . இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் குட்டிகமல் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி உள்ளார். மூன்று தவணைகள் கட்டிய நிலையில் கடந்த சில மாதம் கட்டவில்லை. தற்போது கட்ட முடியாமல் இருப்பதால் அவரை நிதி நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் பணத்தை கட்டுமாறு நெருக்கடி கொடுத்து கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் விரக்தி அடைந்த குட்டி கமல் நேற்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்து திருப்பரங்குன்றம் தியாகராஜர் கல்லூரி மேம் பாலத்தின் சுவரின் மேற்பகுதியில் அமர்ந்து தான் குதித்து தற்கொலை செய்யப் போவதாக கூறி தலையில் ஹெல்மெட்டுடன் குதிக்க முயற்சி செய்தார்.

அப்போது நேற்று திருப்பரங்குன்ற பங்குனி திருவிழா விற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் முதல் நிலை காவலர் அய்யனார் ஆகிய போலீசார் குட்டி கமலிடம் கெஞ்சி குதிக்க வேண்டாம் உனக்கு என்ன உதவி வேண்டுமோ செய்து தருகிறோம் எனக்கூறி மிகவும் லாவகமாக பேசி அவரை பிடித்து இழுத்து கீழே தள்ளி காப்பாற்றினார்.

அதன் பின்பு அவரது நிலையூரில் உள்ள தந்தை கணேசன் மற்றும் குடும்பத்தினரும் அழைத்து பேசி இனிமேல் இதுபோன்று தவறுகளை செய்யக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இதுபோன்று தனியார் நிறுவனங்களில் லோன் வாங்கும் சிலர் நிறுவனத்தின் நெருக்கடியால் மிகவும் மன அழுத்தத்துக்கு ஆளாகி வருகின்றனர் . வசதியான வாழ்வதற்கு அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி சமாளிக்க முடியாமல் பின்னால் தற்கொலைக்கு முயல்வது இளைஞர்களிடம் அதிகரித்து வருகின்றது.

வீட்டில் பெற்றவர்களும் பிள்ளைகளின் வருமானம் குறித்து தகவல்களை கேட்க வேண்டும். வருமானத்திற்கு அதிகமாக பைக் , கார், மற்றும் வீட்டுக்கு உபயோக பொருட்கள் வாங்கி பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வதை விட இருப்பதை வைத்து சமாளிக்க தெரிய வேண்டும்.

பெற்றோர்களும் பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசி அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும் .