• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு உறவினருடன் அனுப்பிய காவல்துறை..,

ByT.Vasanthkumar

Apr 16, 2025

பெரம்பலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த ஹர்சித் (32) என்ற நபரை பெரம்பலூர் காவல்நிலைய காவலர்கள் கடந்த 14.08.2017 அன்று மேற்படி நபரை பெரம்பலூர் வேலா கருணை இல்ல நிர்வாகிஅனிதா அவர்களிடம் ஒப்படைத்தார்.

  பின்னர் மேற்படி நபரை  மனநல மருத்துவர் அசோக் அவர்களால் வேலா கருணை இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 16.04.2025 -ம் தேதி மேற்படி ஹரியானா மாநிலத்தை சேர்ந்த  1.ஹர்சித் (எ) சந்தன்சிங்  (32) கடலா ரேவாரி, ஹரியானா என்பது தெரிய வர மேற்கண்ட நபரை  அவர்களின் அண்ணன் பிரோம்குமார் அவர்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மருதமுத்து, வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா மற்றும் மனநல மருத்துவர் அசோக் ஆகியோர்களால் நல்லமுறையில் ஒப்படைக்கப்பட்டார்.