• Fri. Feb 6th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

போலீசார் குடியிருப்பு பகுதிகளை சீரமைக்க கோரிக்கை..,

ByK Kaliraj

Feb 5, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸாருக்கான குடியிருப்பு வீடுகள் ஆற்று பாலம் அருகில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

குடியிருப்பில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ,மற்றும் காவலர்களுக்கு என தனித்தனி வீடுகள் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டது. குடியிருப்பு வீடுகளுக்கு முன்பு சிறிய மைதானமும் அமைக்கப்பட்டது. குடியிருப்பு வீடுகள் தொடர்ந்து பராமரிக்கப்படாததால் கட்டிடத்தின் பூச்சுகள் சிதைந்து வருகின்றன.

இதனால் கட்டிடம் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. ஆகையால் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக சேதமடைந்த போலீசார் குடியிருப்பு பகுதிகளை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.