மதுரை அவனியாபுரம் கணக்கு பிள்ளை தெருவை சேர்ந்தவர் அசோகன். இவரது மகன் ரஞ்சித் (வயது 40 )அவனியாபுரம் பேருந்து நிலையம் அருகே சங்கர நாராயணன் தெருவில் அண்ணாமலை கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
இவர் கேரளாவில் சித்த மருத்துவம் படித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தனது கிளினிக்கில் ஆங்கில மருத்துவத்திற்கான மருத்துவ சிகிச்சைகளை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அவனியாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் சிகிச்சைக்காக வந்த நிலையில் அவரது மேலும் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதனை தொடர்ந்து CM0 மாநகர முதன்மை மருத்துவ அலுவலர் நரேந்திரன் அளித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் விசாரணை.
ஆயுர்வேத மருத்துவம் பதிவு செய்து மருத்துவர் ரஞ்சித் ஆங்கில மருத்துவத்தில் வரும் நோயாளிகளிடம் சிகிச்சை பார்பது குறித்து புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.