கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள ஆவட்டி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பேரன் கிணற்றில் காலில் கட்டிய நிலையில் சடலமாக மீட்பு தகவல் இருந்து சம்பவிடத்திற்கு வந்த ராமந்த்தம் போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்ததில் பெரம்பலூர் மாவட்டம் ஒகலூர் கிராமத்தைச் சேர்ந்த அசோக்ராஜ் மகன் ஆனந்தராஜ் வயது 17 இவர் ம.புடையூர் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது தாய் சில வருடங்களுக்கு முன்பு லலிதா இறந்துவிட்ட நிலையில் இவரது தந்தை அசோக் ராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்குச் சென்று கணிதம் பொதுத்தேர்வு எழுதிவிட்டு மாலை வீடு திரும்பியவர் 6 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாதால் அவரது உறவினர்கள் பல இடங்களிலும் தேடியுள்ளனர். ஆனந்தராஜ் கிடைக்கவில்லை உடனடியாக அவரது தாத்தா அண்ணாதுரைக்கு சொந்தமான வயலுக்கு சென்றுள்ளனர்.
அங்கு வயலில் உள்ள கிணற்றின் அருகே அவரது செருப்பு இருந்துள்ளது இதனை பார்த்ததும் சந்தேகம் அடைந்து வேப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல்கள் தெரிவித்துள்ளனர். சம்பவிடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி அவரது உடலை மீட்டனர்.
அப்பொழுது ஆனந்தராஜ் காலில் பெரிய கருங்கல் கயிற்றில் கட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் தகவல் அறிந்து சம்பவிடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் ஆனந்தராஜ் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூருக்கு ஆய்விற்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இது தற்கொலையா அல்லது கொலையா என விசாரணை நடத்தி வருகின்றார். பதினொன்றாம் வகுப்பு மாணவன் காலில் கல் கட்டிய நிலையில் சடலமாக கண்டெடுத்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.