காரைக்காலில் காவல்துறை சார்பில் அனைவரின் இல்லத்திலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தி 100க்கு மேற்பட்ட போலீசார் தேசியக்கொடியை வைத்துக்கொண்டு இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்டனர்.

நாட்டின் 79 ஆவது சுதந்திர சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைவரின் இல்லத்திலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்பதற்காக போலீசார் இருசக்கர வாகன மூலம் தேசியக்கொடியை ஏந்தி பிரச்சாரம் செய்தனர்.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள். மேலும் இருசக்கர வாகனத்தில் மூவர்ண தேசிய கொடியை வைத்துக்கொண்டு 100க்கு மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் ஏந்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.