• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உ.பி.யில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 22 முஸ்லிம்கள் உயிரிழந்த சம்பவத்தில் 2 ஆண்டாக எப்ஐஆர் பதிவு செய்யாத போலீஸார்

உ.பி.யில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது 22 முஸ்லிம்கள் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக தெரிகிறது.


ஆனால், 2 ஆண்டுகளாகியும் போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்த 2019 டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) நாடு முழுவதிலும் எதிர்ப்பும், ஆதரவும் நிலவின. இந்த சட்டத்தை எதிர்த்தும், ஆதரித்தும் போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் கரோனா வைரஸ் பரவலால் அந்தப் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.


உ.பி.யில் சிஏஏ-வுக்கு எதிரான பல போராட்டங்கள் கலவரமாக மாறி போலீஸ் துப்பாக்கிச் சூடு களும் நடைபெற்றன. இவற்றில் 22 முஸ்லிம்கள் இறந்ததாக தெரிகிறது. இதன் மீது உ.பி. காவல் நிலையங்களில் எப்ஐஆர் கூடப் பதிவாகவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.