• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பெண்களை ஆபாசமாக சித்தரித்து போலி முகநூல் பக்கத்தில் பதிவு செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளை சார்ந்த இரண்டு இளம் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து போலி முகநூல் பக்கங்கள் பதிவு செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து புகார் மீது விசாரணை மேற்கொண்ட கிரைம் பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கண்டறிந்தனர்.

அந்த நபர் காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (26) என்பவர் என தெரிய வந்த நிலையில், அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பரிந்துரைத்ததன் பேரில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த பிறப்பித்த உத்தரவின் படி சுரேஷ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்ணிய சிறையில் அடைக்கப்பட்டார்.

பெண்களுக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் தவறாக பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரித்துள்ளார்.