• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

விருதுநகரில் போலீஸ் கொடி அணி வகுப்பு..,

விருதுநகர் மாவட்ட காவல் துறை சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விருதுநகரில் போலீஸ் கொடி அணி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது. இந்த அணி வகுப்பு நிகழ்ச்சியை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்த கொடி அணி வகுப்பு விருதுநகர் மாவட்ட நூலகம் வாயிலில் இருந்து தொடங்கியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் அவர்கள் கொடி அசைத்து இந்த அணி வகுப்பைத் துவக்கி வைத்தார். காவல் துறையினரின் இந்த அணி வகுப்பு, கச்சேரி ரோடு, மெயின் பசார் மற்றும் மேல் ரத வீதி வழியாகச் சென்று, இறுதியாக கே.வி.எஸ் (KVS) பள்ளியில் நிறைவடைந்தது.