பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற காவல் துறை ஆலோசனை கூட்டத்தில், மே-11ல் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டில் பெரம்பலூர் மாவட்ட சார்பில் கலந்து கொள்ளும். வன்னியர் சங்கம், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர், மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா மாநாட்டிற்கு வாகனத்தில் செல்லும் போது, பின்பற்ற வேண்டிய சாலை விதிமுறைகள் மற்றும் சில அறிவுரைகள் வழங்கினார்கள்.

மேலும், இக்கூட்டத்தில் பெரம்பலூர் உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் மற்றும் மங்களமேடு உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் தனசேகரன் அவர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், கலந்து கொண்டார்கள்.